தண்டப்பணம் செலுத்தும் காலம் நீடிப்பு

மோட்டார் போக்குவரத்து சட்டதிட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் 20.03.2020ம் திகதி வழங்கப்பட்ட மோட்டார் வாகனங்களுக்கான தண்டப்பத்திரங்களுக்கான கட்டணங்களை எதிர்வரும் 29ம் திகதி வரை மேலதிக தண்டப்பணமின்றி செலுத்தலாமென அஞ்சல் மா அதிபதி ரஞ்ஜித் ஆரியரத்ன அறிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டம் காரணமாக தபாலகங்கள் திறக்கப்படாததால் செலுத்த முடியாமல் போன மோட்டார் வாகனங்களுக்கான தண்டப்பணப் பத்திரங்களுக்கான கட்டணங்களை மேலதிக தண்டப்பணமின்றி செலுத்துவதற்கு சலுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பாடல் அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கிடையில் நடத்தப்பட்ட கலந்துரையாடலில் இணக்கப்பாட்டுக்கமைய இச் சலுகைக்காலம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 16 தொடக்கம் 29 வரையான காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ள தண்டப்பண பத்திரங்களுக்கு மேலதிக கட்டணத்துடன் அவற்றைச் செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள மாவட்டங்களிலுள்ள அஞ்சல் அலுவலகங்களைத் தவிர ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் அஞ்சல் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

(ஒலுவில் விசேட நிருபர்)

Thu, 05/14/2020 - 08:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை