நாட்டின் ஏற்றுமதி வருவாய் வெகுவாக வீழ்ச்சி

கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக நாட்டின் ஏற்றுமதி வருமானம் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கிணங்க தேயிலை, தேங்காய் மற்றும் இறப்பர் உற்பத்தி ஏற்றுமதி வருமானம் மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக ஏற்றுமதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில் வர்த்தகப் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 64 வீதத்தால் குறைந்துள்ளது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாட்டிற்கு 772.57 மில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ள நிலையில் இந்த வருடம் ஏப்ரல் மாதம் வரையான ஏற்றுமதி வருமானம் 277.4 மில்லியன் அமெரிக்கன் டொலர் மட்டுமே என தெரிவிக்கப்படுகிறது.

அதற்கிணங்க நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளான ஆடைத் தொழில்துறை ஏற்றுமதி வருமானம் 82 விதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அந்த வகையில் தேயிலை ஏற்றுமதி வருமானம் 21 வீதமாகவும் தேங்காய் ஏற்றுமதி வருமானம் 35.2 வீதமாகவும் இறப்பர் ஏற்றுமதி வருமானம் 53 வீதமாகவும் கடல் உணவு ஏற்றுமதி வருமானம் 72 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 05/27/2020 - 13:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை