நிவாரணம் வழங்குவதில் மொனராகலை பெருந்தோட்டப் பகுதிகளில் புறக்கணிப்பு

மக்கள் குற்றச்சாட்டு

மொனராகலை மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்ட மக்களுக்கு எந்தவித நிவாரணமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதுடன், நிவாரணம் வழங்குவதில் இங்கு பாரபட்சம் காட்டப்படுவதாக இந்த மக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். 

5000 ரூபா அரச நிவாரணம் கடந்த மாதம் நாடு பூராகவும் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த நிவாரணம் மொனராகலை மாவட்டத்தில் வாழும் பெருந்தோட்ட மக்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை. கிராம அலுவர்களின் பாரிய இழுத்தடிப்புகளுக்கு மத்தியிலே சிலருக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. என்றாலும் பலருக்கு நிவாரணம் மறுக்கப்பட்டுள்ளது.

“நிவாரணக் கொடுப்பனவின் போது அரசியல் பாகுபாடு காட்டப்படுகிறது.  எங்களை காரியாலயத்திற்கு வந்து சந்திக்கும் படியும் அங்கு சென்றால் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை எனவும் சுமார் 6 மணித்தியாலயங்கள் வரை காரியாலயங்களில் காத்திருந்து மீண்டும் வீடு திரும்பியதே மீதமாகும் - என மக்கள் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.

பெருபான்மையினர் வாழ்கின்ற பகுதிகளில் அரசியல்வாதிகள் சகல நிவாரணங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளனர். ஆனால், பெருந்தோட்டப் பகுதிகள் மாத்திரம் புறக்கணிக்கப்பட்டுகின்றன.

அதேநேரம் கடந்தசில மாதங்களாக நிலவிய வரட்சியால் தோட்ட மக்களுக்கு போதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆகவே, மொனராகலை மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்ட மக்களையும் அரசியல்வாதிகள் கண்டுகொள்ள வேண்டுமென இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

(மொனராகலை நிருபர்)

Sat, 05/09/2020 - 11:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை