வடமராட்சியில் வீட்டுக்குள் புகுந்து பொலிஸார் தாக்குதல்

மணல் ஏற்றியதாகக் கூறி வாகனத்தை எடுத்துச் செல்ல முற்பட்ட பொலிஸார்

யாழ்.வடமராட்சி கிழக்கு குடத்தனை - மாளிகைதிடல் அம்மன் கோவிலடி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த பொலிஸார் வீட்டிலிருந்தவர்கள் மீதும் அயல் வீட்டவர்கள் மீதும் நடத்திய  தாக்குதலில் 3 பேர் காயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்றுக் காலை இடம்பெற்றிருக்கின்றது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த பொலிஸார் கள்ள மண் ஏற்றியதாகவும், கன்ரர் வாகனத்தை எடுத்து செல்லப்போவதாக கூறியிருக்கின்றனர்.

இதனையடுத்து தாம் மணல் ஏற்றவில்லை. எனவும் வாகனத்தின் இயந்திரத்தில் சூடு இருக்கிறதா? என பார்க்குமாறு வீட்டிலிருந்த இளைஞர்கள் கூறிய நிலையில் விடாப்பிடியாக பொலிஸார் வாகனங்களை தாம் எடுத்து செல்லபோவதாக கூறினர். இதனையடுத்து பொலிஸாரின் அத்துமீறலை வீடியோ எடுத்துள்ளனர். இதனையடுத்து தொலைபேசியை பறித்துவைத்த பொலிஸார் வழக்குப் போடுவோம் என அச்சுறுத்தியதுடன், வீடியோ வெளியே போகக்கூடாது என அச்சுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து மீண்டும் அதே வீட்டுக்கு சென்ற பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் பெண்கள், ஆண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள் என அனைவர் மீது  தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இந்நிலையில் 3 பேர் காயமடைந்து மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இன்னும் பலர் காயமடைந்துள்ளபோதும். அவர்கள் அச்சத்தினால் தமது வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.

பருத்தித்துறை விசேட நிருபர்

Sat, 05/02/2020 - 09:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை