பங்களாதேஷ் பிரஜைகளுடன் புறப்பட்ட விசேட விமானம்

அவுஸ்திரேலியாவில் சிக்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகள் 165 பேர், ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானம் மூலம் பங்களாதேஷுக்கு புறப்படுவதற்காக, நேற்றிரவு (08)  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 605 எனும் விசேட விமானம்,  அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து நேற்றிரவு 8.05 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து பங்களாதேஷின் டாக்கா நகருக்கு சர்வதேச விமானப் போக்குவரத்துச் சேவைகள் இன்மையால்,  குறித்த விமானத்தின் மூலம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்தனர். இங்கிருந்து இவர்கள் பங்களாதேஷின் டாக்கா நகரைச் சென்றடைந்துள்ளனர்.  

இவ்வாறு வருகை தந்த பங்களாதேஷ் பிரஜைகளும் அவர்களின் பயணப் பொதிகளும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கை இராணுவத்தினரால் தொற்றுநீக்கம் செய்யப்பட்டது.

இதன் பின்னர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பங்களாதேஷின் டாக்கா நகருக்கு புறப்படும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1422 எனும் விசேட விமானம் மூலம் பங்களாதேஷ் பிரஜைகள் 165 பேரும்  செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
அத்தோடு, கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பங்களாதேஷுக்கு செல்ல முடியாமல், இலங்கையில் சிக்கியிருந்த மேலும் 11 பங்களாதேஷ் பிரஜைகள் இவ்விமானத்தில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கமைய, பங்களாதேஷ் பிரஜைகள் 176 பேரை ஏற்றிக்கொண்டு இவ்விமானம், நேற்றிரவு (09) 10.05 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, பங்களாதேஷின் டாக்கா நகர் நோக்கி புறப்பட்டிருந்தது. 

Sat, 05/09/2020 - 10:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை