ஒன்றிணைந்த முயற்சி பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்தும்

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பொருளாதார, வர்த்தக பிரிவின் தலைமை அதிகாரி

அரசாங்கத்திற்கும் வர்த்தக சமூகத்தினருக்கு மிடையிலான ஒன்றிணைந்த முயற்சிகள் துரிதமான பொருளாதார மீட்சியை உறுதிப்படுத்துமென இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக பிரிவின் தலைமை அதிகாரி திருமதி சுஜா கே மேனன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் இந்தியாவின் ASSOCHAM ஒன்றிணைந்து நடத்திய இணைய செயலமர்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொவிட் நோய்க்கு பின்னரான பொருளாதார மீட்சி தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை வர்த்தக சம்மேளனம் மற்றும் இந்தியாவின் ASSOCHAM ஆகிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து இணைய செயலமர்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன.

இந்த இணைய செயலமர்வில் (Webinar) இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக பிரிவின் தலைமை அதிகாரி திருமதி சுஜா கே மேனன் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். அண்மையில், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் தனது நியமன சான்றிதழை ஜனாதிபதியிடம் காணொளி மாநாடு மூலமாக சமர்ப்பித்திருந்தமை இலங்கையிலும் இந்தியாவிலும் முதன்முதலாக நடைபெற்ற ஒரு நிகழ்வென குறிப்பிட்டிருந்த அவர், கொவிட் 19 நோயினால் ஏற்பட்டிருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு தொழில்நுட்பத்தின் புத்தாக்கமான பயன்பாடு மிகவும் முக்கியமானது எனவும் சுட்டிக்காட்டினார்.

ஆசியான் (ASEAN) இந்திய மையம் (AIC), மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் பொறிமுறை (RIS), ஆகியவற்றின் தலைவர் பேராசிரியர் பிரபிர் தே, இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி மஞ்சுள டி சில்வா ASSOCHAM நிறுவனத்தின் செயலாளர் நாயகம் தீபக் சூத், ASSOCHAM முன்னாள் தலைவரும் கொஸ்மோஸ்(Cosmos) குழுமத்தின் தலைவருமான அனில் கே அகர்வால், இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைமை பொருளியலாளர் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோர் இந்த இணைய செயலமர்வில் கலந்துகொண்டனர்.

Mon, 05/18/2020 - 14:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை