தேர்தல் நடத்த அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

எதிரான மனுக்களை நிராகரிக்குமாறும் கோரிக்கை

பாராளுமன்றத்தை கலைக்கும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவிப்பும் ஜூன் 20 இல் தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி அறிவிப்பும் சட்டபூர்வமானவை என அறிவிக்குமாறு    கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த இடையீட்டு மனுவை டபிள்யூ.ரீ.சி. ஒட்டோ மொபைல் நிறுவன பணிப்பாளர் இந்திக சம்பத் சமர்ப்பித்துள்ளார். வர்த்தமானி அறிவித்தல்களை இரத்து செய்யக் கோரும் சகல மனுக்களையும் நிராகரிக்குமாறும்   ஜூன் 20 இல் தேர்தல் நடத்த அனுமதிக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவிப்புகளை இரத்துச் செய்யக் கோரும் மனுக்கள் எந்த சட்டபூர்வமுமற்றவை எனவும் வர்த்தமானி அறிவிப்புகள் அரசியலமைப்பிற்கும் தேர்தல் சட்டத்திற்கு அமைவாகவே வெளியிடப்பட்டுள்ளன எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளன. அதனால் வர்த்தமானி அறிவிப்புகளுக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு எடுக்காமல் நிராகரிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை நேற்று முன்தினம் ஆராயப்பட்டது தெரிந்ததே. (பா)

Wed, 05/13/2020 - 09:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை