உலக நாடுகளுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கொரோனா தாக்கத்தை முன்னிட்டு உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளை எச்சரித்து வருகிறது. கொரோனா தாக்கத்தை அடுத்து உலக நாடுகள் அனைத்தும் கவனமாக இல்லை என்றால் தீவிரமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என கூறி உள்ளது.

உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ராஸ் அடனம் இதுகுறித்துப் பேசியபோது  கொரோனாவை ஒழிக்க படிப்படியான நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாகவும்  சரியான மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் தளர்த்தப்பட்ட ஊரடங்கை மீண்டும் போடவேண்டி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

7.5 டிரில்லியன் டொலர் பணத்தை ஆண்டுதோறும் உலக நாடுகள் மருத்துவத்துக்காக செலவிட்டு வருகிறது. தற்போது கொரோனா தாக்கதை அடுத்து அந்த நிதி அதிகரித்து வருகிறது. பெரியம்மை  பிளேக் உள்ளிட்ட அபாயகரமான நோய்களில் இருந்து மனித இனம் தப்பியது. அதேபோல எதிர்காலத்தில் கொரோனாவில் இருந்து உலகம் தப்பியது பெரும் சாதனையாக பார்க்கப்படும். உலக சுகாதார நிறுவனத்துக்கு அதிகமாக நிதி கொடுத்துவரும் வல்லரசு நாடு அமெரிக்கா. கொரோனா பாதிப்பு முடிந்த பிறகு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அதனை எவ்வாறு கையாண்டன என ஓர் கருத்துக்கணிப்பு உலக சுகாதார நிறுவனத்தால் எடுக்கப்படும். இது எதிர்காலத் தேவைக்காக பராமரிக்கப்படும் எனப்படுகிறது.

Fri, 05/08/2020 - 12:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை