பெருந்தோட்ட மக்களின் சுகாதார பாதுகாப்பு; கம்பனிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும்

பெருந்தோட்ட மக்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பாக பெருந்தோட்ட கம்பனிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இது தொடர்பாக பெருந்தோட்ட கம்பனிகள் அசமந்த போக்குடனேயே செயற்படுகின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அநேகமான தொழில்துறை முடங்கிக்கிடக்கின்ற இந்த அசாதாரணமான சூழ்நிலையில் பெருந்தோட்ட தொழிலாளர்கள் மாத்திரமே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறான ஒரு நிலையில் அவர்கள் தங்களுடைய வேலை செய்கின்ற இடங்களில் முகக்கவசம் அணிவதற்கோ அல்லது கொழுந்து  நிறுக்கின்ற பொழுதோ சமூக இடைவெளி என்பது அறவே பேணப்படுவதில்லை. இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு கிருமி தொற்று ஏற்படுவதற்கான அபாயகரமான ஒரு நிலை இருக்கின்றது.

எனவே, இது தொடர்பாக தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு பெருந்தோட்ட கம்பனிகளையே சாரும். ஆனால், எந்த ஒரு பெருந்தோட்ட கம்பனியும் இது தொடர்பாக அக்கறை எடுத்து செயற்படுவதாக தெரியவில்லை. அவர்கள் அசமந்த போக்குடனேயே செயற்படுவதை காணமுடிகின்றது.

ஆனால், பெருந்தோட்ட காரியாலயங்களில் அனைத்து விதமான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதே வசதிகளை எங்களுடைய தோட்டத் தொழிலாளர்களுக்கும் செய்துகொடுப்பதற்கு பெருந்தோட்ட கம்பனிகள் முன்வரவேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.

(நுவரெலியா நிருபர்)

Tue, 05/05/2020 - 10:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை