கொரோனா வைரஸ் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு அழைப்பு

கொவிட்-19 வைரஸ் தொற்றை கையாள்வதில் சர்வதேச நடவடிக்கைகள் குறித்து மீளாய்வு செய்வதற்கு உலக நாடுகள் அழைப்பு விடுக்கவுள்ளன.

ஐ.நா நிறுவனமாக உலக சுகாதார அமைப்பின் 73 ஆவது மாநாடு நேற்று ஆரம்பமான நிலையில் அது இன்று முடிவடையவுள்ளது. இதில் அந்த அமைப்பின் 194 உறுப்பு நாடுகளின் தூதுவர்களும் காணொளி மூலம் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் கொரோனா வைரஸ் தொற்று பிரதான விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உறுப்பு நாடுகள் கையாண்ட முறைகள் பற்றி இதன்போது கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்த உலகளாவிய நோய்த் தொற்றினால் இதுவரை 300,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் இந்த வைரஸ் சீனாவில் தோன்றியது தொடக்கம் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தற்போது 4.8 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பரவல் தொடர்பில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே முறுகல் இடம்பெற்று வரும் நிலையிலேயே இந்த மாநாடு ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸை கையாண்டது எப்படி மற்றும் அதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்கள் பற்றி சுயாதீன விசாரணை ஒன்றை நடத்துவதற்கு பிரிட்டன், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த விசாரணையில் பல கேள்விகளுக்கு விடை தேட வேண்டி இருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய பேச்சாளர் விர்ஜினி பட்டு-ஹெரிக்சன் தெரிவித்துள்ளார்.

“இந்த வைரஸ் எப்படி பரவியது? இதன் பின்னணி என்ன? இது போன்ற மற்றொரு வைரஸ் தொற்றை தவிர்த்து முன்னோக்கிச் செல்வதற்கு இவைகளுக்கு விடை அவசியமாகும்” என்று அவர் தெரிவித்தார். எனினும் யார் மீதும் குற்றம் சுமத்த இது நேரமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Tue, 05/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை