அரச ஊழியர்களின் ஒருமாத வேதனத்தை தானம் கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது

அரசாங்க ஊழியர்களின் ஒருமாத வேதனத்தை அரசாங்கத்துக்கு நிவாரணமாக வழங்க வேண்டுமென ஜனாதிபதியின் செயலாளர் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு கண்டனத்தை வெளிப்படுத்துவதாக முன்னாள் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதாவது,

ஜனாதிபதியின் செயலாளரினால் தனிப்பட்ட கோரிக்கை என்ற கோதாவில் அரசாங்கத்தை பிரநிதித்துவப்படுத்தும் அத்தனை அரசாங்க ஊழியர்களும் தங்களின் ஒருமாத சம்பளத்தை தானமாக வழங்கவேண்டும் என்ற ஒரு தனிப்பட் கோரிக்கையை முன்வைத்ததாக அவர் கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் அது ஒரு தனிப்பட்ட கோரிக்கையாக இருந்தால் எவ்வாறு ஜனாதிபதி செயலகத்தின் கடிதத் தலைப்பில் முன்வைக்க முடியும்.

நாங்கள் ஒரு தனிப்பட்ட கோரிக்கையாக இதைப் பார்க்க முடியாது.  இதனை ஒரு உத்தியோகபூர்வமான கோரிக்கையாக பார்க்க வேண்டியுள்ளது. இவ்வாறான சிலரின் தனிப்பட்ட கோரிக்கைகளை பற்றி நாம் சற்று சிந்தித்து செயற்பட வேண்டும். அரசாங்கம் தேவையில்லாத ஒரு தேர்தலை நடத்த முனைகின்றது. இந்த தேர்தல் செலவை ஈடுகட்டுவதற்காகவே இவ்வாறு அரசு ஊழியர்களிடம் இருந்து ஒரு மாத சம்பளத்தை பெறுவதற்கு அரசாங்கம் எத்தனிக்கின்றதா என்ற சந்தேகமும் எழுகின்றது என்றும் கூறியுள்ளார்.

(மடுல்சீமை சுரேந்திரன்)

Tue, 05/12/2020 - 12:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை