சம்பூர் அனல்மின் நிலைய காணியின் இரும்பு தூண்கள் திருட்டு

சம்பூர் அனல்மின் நிலைய காணியின் இரும்பு தூண்கள் திருட்டு-Trincomalee Sampur Coal Power Plant Land Fence Robbery-7 Arrested

திருகோணமலை - சம்பூர்  பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவிருந்த அனல் மின் நிலையத்தை சுற்றி  போடப்பட்டிருந்த இரும்பு தூண்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் ஏழு பேரை இன்று (06) கைது செய்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபை மற்றும் திருகோணமலை பவர் கம்பெனி லிமிடெட் இணைந்து கடந்த 2015ஆம் ஆண்டு சம்பூர் பகுதியில் அனல் மின் நிலையமொன்றினை அமைப்பதற்கு 540 ஏக்கர் காணிகளை  பெற்றுக்கொண்டது.

சம்பூர் அனல்மின் நிலைய காணியின் இரும்பு தூண்கள் திருட்டு-Trincomalee Sampur Coal Power Plant Land Fence Robbery-7 Arrested

இந்நிலையில்  அக்காணியை சுற்றி ஆறு கிலோ மீட்டர்   இரும்பு  தூண்களினால் வேலிகள்  அமைக்கப்பட்டிருந்த போது அத்தூண்கள் வெட்டப்பட்டு திருடப்பட்டுள்ளதாக அதில் கடமையாற்றி வரும் பாதுகாப்பு உத்தியோகத்தரான சம்பூர் பகுதியைச் சேர்ந்த யோகையா சுபாகரன் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இம்முறைப்பாட்டினையடுத்து சம்பூர் பொலிஸ் பொறுப்பதிகாரி புத்திக ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகத்தின் பேரில் ஏழு பேரை கைதுசெய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

சம்பூர் அனல்மின் நிலைய காணியின் இரும்பு தூண்கள் திருட்டு-Trincomalee Sampur Coal Power Plant Land Fence Robbery-7 Arrested

குறித்த ஏழு பேரில் ஒருவர்  வேறொரு குற்றச்சாட்டுக்காக  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மூதூர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)

Wed, 05/06/2020 - 13:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை