“வந்தே பாரத் மிஷன்” திட்டம்; இலங்கையிலுள்ள இந்தியர்கள் நாடு திரும்ப விசேட விமானம்

இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு

“வந்தே பாரத் மிஷன்” திட்டத்தின் கீழ் நாடு திரும்ப முடியாத நிலையில் உலகளவில் சிக்கியிருக்கும் இந்திய பிரஜைகளை இந்தியாவுக்கு திருப்பி அழைத்துக்கொளவதற்கான பாரிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இத் திட்டத்தின் ஓர் அங்கமாக விசேட எயார் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான ; AI 0276 விமானமொன்று இலங்கையிலிருந்து எதிர்வரும் மே 29 (வெள்ளிக்கிழமை) கொழும்பிலிருந்து மும்பாய்க்கு பயணிக்கவுள்ளது. இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த விமானத்திற்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவசரமாக நாடு திரும்ப வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு,  குறிப்பாக நிர்க்கதியாகியுள்ள குடிபெயர் தொழிலாளர்கள்,  விசா காலாவதியான நிலையில் தங்கியிருப்பவர்கள், மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர், கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், குடும்ப உறுப்பினரின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக இந்தியா திரும்புவதற்கு கோரிக்கைகளை முன் வைத்திருப்போர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு வெளிநாடுகளில் சிக்குண்டிருப்பவர்களுக்காக இந்திய உள்துறை அமைச்சினால் 2020 மே 05ஆம் திகதி வெளியிடப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட செயற்பாட்டு முறைமையின் பிரகாரம்,  முன்னுரிமை வழங்கப்படும்.

Wed, 05/20/2020 - 09:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை