ஹொங்கொங் பாதுகாப்பு சட்டத்தை தாமதம் இன்றி நிறைவேற்ற உறுதி

ஹொங்கொங்கில் வளர்ந்துவரும் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கு சீனா அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய பாதுகாப்புச் சட்டம் அவசியமாக இருப்பதாக அந்த நகரின் பாதுகாப்புக்கான செயலாளர் ஜோன் லீ தெரிவித்துள்ளார்.

நகரம் வன்முறைகளால் மூழ்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஹொங்கொங்கில் கடந்த ஒருசில மாதங்களாக நீடித்த அமைதி நிலைக்குப் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய பாதுகாப்புச் சடத்திற்கு எதிராகவே மக்கள் வீதிகளில் திரண்டனர்.

சுதந்திரம் மற்றும் அரசை விமர்சிப்பவர்களை கட்டுப்படுத்தும் நேரடி முயற்சியாக இந்த சட்டம் இருப்பதாக அதனை விமர்சிப்பவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த சட்டமூலம் சீன பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் சிறிதளவு தாமதம் இன்றி கொண்டுவரப்பட வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜோன் லீ நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த ஆண்டு ஹொங்கொங்கில் வன்முறைகள் எல்லை மீறி இருந்தன. பல சம்பவங்களில் வெடி பொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன” என்று குறிப்பிட்டார்.

“நகரில் பயங்கரவாதம் அதிகரித்து வருவதோடு அந்த செயற்பாடுகள் ஹொங்கொங் சுதந்திரம் போன்று தேசிய பாதுகாப்பிற்கும் பாதகமானதாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tue, 05/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை