74 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவுக்கு 5,000 கோடி ரூபா அரசு செலவு

நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள 74 இலட்சம் குடும்பங்களுக்கு அரசாங்கம் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்கியுள்ளதாகவும் இதற்கென அரசாங்கம் 5,000 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இரண்டாம் கட்டமாகவும் மேலும் 74 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர்  தெரிவித்தார்.

அரசாங்கம் கொரோனா  வைரஸ் ஒழிப்பு, அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட  பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள நிலையிலேயே 74 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா வீதம் கொடுப்பனவை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில்நேற்றைய தினம் ஊடகமொன்றுக்குகருத்து தெரிவிக்கையிலேயே சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு சமுர்த்தி உள்ளிட்ட வழமையான கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வரும் நிலையிலேயே பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் 5,000 ரூபா வீதம் வழங்குவதற்கு அரசாங்கத்தினால் முடிந்துள்ளது.

மாகாண சபைகள், உள்ளூராட்சி சபைகள் செயலற்றுள்ள நிலையிலேயே கிராம சேவை அதிகாரிகள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளடங்கிய அதிகாரிகளின் விசேட செயற்பாட்டின் கீழ் இந்த நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய நிலையில் சில பிரதேசங்களில் சிறு சிறு குறைபாடுகள் நிலவுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. இரண்டாம் கட்ட கொடுப்பனவின் போது அதனை நாம் நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ளோம்.

5,000 கோடி ரூபாவை அரசாங்கம் இதன்மூலம் மக்களுக்குப் பகிர்ந்தளித்துள்ளது.

இரண்டாம் கட்டமாகவும் இந்த அளவு தொகையை பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டு அந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 05/12/2020 - 09:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை