இதுவரை 62 கடற்படை வீரர்கள் பூரண சுகம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 62 கடற்படை வீரர்கள் இதுவரை குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான இக்கடற்படை வீரர்களில் 07 பேர் ஹோமாகம வைத்தியசாலையிலும், இருவர் முல்லேரியா வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் IDH வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  வந்தனர். அவர்கள் வைத்தியசாலைகளில்  சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் அவர்களது உடலில் இல்லை என்று உறுதி செய்யப்பட்டதால், அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (12) வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இக்கடற்படை வீரர்கள் 10 பேர் உட்பட, இதுவரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 62 கடற்படை வீரர்கள் கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். வைத்தியசாலைகளிலிருந்து அவர்கள் வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 382 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 05/13/2020 - 17:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை