ரூ. 5000 நிவாரணம்; மூன்று கிழமைகள் காத்திருந்தும் ஹப்புத்தளை மக்களுக்கு ஏமாற்றம்

ஹப்புத்தளையில் 5000 ரூபா அரச நிவாரணத்துக்காக பெருந்தோட்ட மக்கள் ஹப்புத்தளை செயலகம் முன்பாக தொடர்ந்து மூன்று கிழமைகளாக காத்திருந்து ஏமாற்றமே மிஞ்சியுள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்ததுடன் நேற்று பாரிய போராட்டத்திலும் ஈடுபட்டனர். கொவிட் 19 வைரஸ் தொற்று பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த அனைவருக்கும் அரச நிவாரணமாக 5000 ரூபா வழங்கப்பட்டு வருகிறது.

என்றாலும், இந்த நிவாரணப் பணம் ஹப்புத்தளையில் உள்ள தோட்டங்களில் முறையாக கிடைக்கவில்லை என தொழிலாளர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கடந்த மூன்று கிழமையாக ஹப்புத்தளை பிரதேச செயலகத்திற்கு முன்னாக நீண்ட வரிசையில் தினம் தினம் காத்திருந்தும் ஏமாற்றம் மாத்திரமே இவர்களுக்கு மிஞ்சியதால் நேற்று பாரிய எதிர்ப்பு போராட்டமொன்றை இந்த மக்கள் முன்னெடுத்தனர்.

அதிகமான மக்கள் கூடியதால் இப்போராட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அதையடுத்து நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதும், தமது கோரிக்கைகளடங்கிய மகஜரொன்றை பிரதேச செயலாளரிடம் இவர்கள் ஒப்படைத்துள்ளனர்.  அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

(பதுளை விசேட நிருபர்)

Wed, 05/06/2020 - 14:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை