கொழும்பு நகரிலுள்ள குடிசைவாசிகளுக்கு 50,000 வீட்டுத் திட்டம்

பிரதமரின் ஆலோசனையில் இன்று ஆரம்பம்

கொழும்பு நகரிலுள்ள குடிசைவாசிகளுக்காக 50 ஆயிரம் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனையின் கீழ் இன்று (5) ஆரம்பமாகிறது.

முதற்கட்டமாக கொழும்பு 14 ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, எதிரிசிங்க மாவத்தை ஸ்டேடியம் உயன அருகில் 1,000 வீடுகளை கொண்ட மாடிவீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்படுகிறது.

550 சதுர அடியில் வீடுகள் அமைக்கப்பட இருப்பதோடு இதற்கு ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி வங்கி உதவியளிக்கிறது. இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு 5,950 மில்லியன் ரூபா செலவிடப்பட இருப்பதோடு 03 வருட காலத்தினுள் வீட்டுத் திட்டம் நிறைவு செய்யப்படும். தற்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சு செயலாளராக இருந்த போது 60,000 வீடுகள் அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலத்தில் 12,500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. கடந்த வருடங்களில் இந்த திட்டம் தடைப்பட்டது. குடிசைவாசிகளுக்காக மத்திய கொழும்பு, வடகொழும்பு, பொரளை, தெமட்டகொடை அடங்கிய பகுதிகளில் 50,000 வீடுகள் அமைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. (பா)

Tue, 05/05/2020 - 08:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை