கொழும்பில் 40,000 வீடமைப்புத் திட்டம்

300 வீடுகளுடன் தொடர் மாடி நிர்மாணிப்பு

02 ஆவது கட்டம் ராஜகிரியவில் ஆரம்பம்

கொழும்பு நகரின் ஒழுங்கற்ற குடியிருப்புகளின் வாழும் 40,000 குடும்பங்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் மற்றுமொரு கட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் பணிப்புரைக்கமைய நேற்று 14 ஆம் திகதி மு.ப. 9.00 மணிக்கு ராஜகிரிய. ஒபேசேக்கரபுர அருணோதய மாவத்தைக்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது.

நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் பிரியத் பந்து விக்கிரம, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஹர்ஷான் த சில்வா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர ஆகிய உயர் அதிகாரிகளின் பங்குபற்றலுடன் 300 வீடமைப்பு அலகுக ளைக்கொண் வீடமைப்புத் தொகுதி நிர்மாண நடவடிக்கைகள் ஆரம்பக்கப்பட்டது.

இவ் வீடமைப்பு செயற்றிட்டத்தில் நிர்மாணிக்கப்படும் வீட்டு அலகு ஒன்றின் சதுர அடி 550 ஆகும். ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கியின் நிதியுதவின் கீழ் நிர்மாணிக்கப்படும் இந்த தொடர்மாடிவீட்டு தொகுதிக்காக 1733.24 மில்லியன் ரூபா செலவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

2 வருடங்களுக்குள் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் செய்து முடிக்கப்படவுள்ளது. நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பூரண மேற்பார்வையின் கீழ் சுபசிங்ஹ ஒப்பந்ததாரர் நிறுவனத்தினால் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Fri, 05/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை