கம்பளையில் வர்த்தக நிலைகளுக்கு மே 4ஆம் திகதி வரை பூட்டு

கொரோனா  வைரஸ்  பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கம்பளை நகரில் நேற்றுமுதல் எதிர்வரும் திங்கட்கிழமை (4) அதிகாலை 5 மணிவரை கடைகளை திறக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள், மருந்தகங்களுக்கு தமது பணிகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது. பொலிஸ் அதிகாரிகள், சுகாதார மருத்துவ அதிகாரிகள், பொது சுகாதார அதிகாரிகள், வர்த்தக சங்க பிரமுகர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

இதன்போதே அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளையும், மருந்தகங்களையும்தவிர ஏனையவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு முடிவெடுக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்து, மக்களை பாதுகாக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Fri, 05/01/2020 - 13:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை