கடந்த 4 மாதங்களில் 18,835 டெங்கு நோயளார்கள் அடையாளம்

தென்மேற்கு பருவக்காற்று மழையைத் தொடர்ந்து எதிர்வரும் காலங்களில் டெங்கு நோய் பரவும்  சாத்தியம் அதிகரித்துக்  காணப்படுமென, சுகாதார பிரிவு எச்சரித்துள்ளது.

தற்போது இக்காலப்பகுதியில் அதிகளவானோர் வீடுகளில் இருப்பதால்,  டெங்கு ஆபத்துக் குறித்து அவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென, சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியினுள்  18,835 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்தது.  

அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் ஜனவரியில் பதிவாகியுள்ளதோடு, இம்மாதத்தில் 11,595 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த மாதத்தில் 383 வரையான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 05/06/2020 - 13:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை