மின்சாரம், நீர்க் கட்டணம் செலுத்த 30 நாள் அவகாசம்; துண்டிப்பு கிடையாது

மின்சாரக் கட்டணம் மற்றும் நீர்க்கட்டணங்களை செலுத்துவதாற்கான நிவாரணக் காலமொன்றை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் இரண்டு மாதங்களுக்கான மின் கட்டணப்பட்டியல் ஒரே நேரத்தில் கிடைக்குமாயின் ஒரு மின் கட்டணப் பட்டியலை செலுத்த 30 நாட்கள் கால அவகாசம் பெற்றுக்கொடுக்கப்படுமென மின்சக்தி அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளர் சுலக்ஷ்ன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தற்போது மின்சார சபைக்கு கிடைக்கும் வருவாய் மிகக் குறைவடைந்துள்ளதால் வழங்கப்பட்டுள்ள நிவாரணக் காலத்துள் மின் கட்டணங்களை செலுத்த பாவனையாளர்கள் கூடுதல் கவனமெடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.

இதே போன்று நீர்க்கட்டணப்பட்டியல்கள் ஒரே தடவையில் கிடைத்திருப்பின் ஒரு கட்டணப் பட்டியலைச் செலுத்த  ஒரு மாதகால அவகாசம் வழங்கப்படுமென்றும்  நீர் வழங்கல் சபையின் தலைவர் நிஷாந்த ரணதுங்க  தெரிவித்தார்.

எவ்வாறாயினும் நீர் வழங்கல் துண்டிப்பு செய்யப்படமாட்டாதென்றும் அவர் தெரிவித்தார். 

Mon, 05/11/2020 - 11:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை