விமான நிலைய சுங்க வரி விலக்கு கடைகளுக்கு 3 மாத சலுகை

வாடகை அறவிடாதிருக்க தீர்மானம்

கோவிட் 19 காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் விமான நிலையத்திலுள்ள சுங்கத்தீர்வை கடைகள், சேவை வழங்கும் நிறுவனங்கள் என்பனவற்றிடமிருந்து 03 மாத காலத்திற்கு வாடகை அறிவிடாதிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனைக்கமைய விமான நிலைய மற்றும் விமானச் சேவை நிறுவனம் இதற்கான நடவடிக்கை எடுத்துள்ளது. விமான நிலையத்தில் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் அமைச்சர் பிரசன்னவிற்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இது தொடர்பிலான உடன்பாடு ஏற்பட்டது. இதற்கமைய சுங்கத்தீர்வை கடைகள், சேவை வழங்கும் நிறுவனங்கள், சுற்றுலா கூடங்கள் என்பவற்றிடமிருந்து 03 மாத வாடகை அறவிடப்படாது.

மார்ச் 19 முதல் 03 மாத காலத்திற்கு இந்த சலுகை வழங்கப்படும். இது தவிர இங்கு செயற்படும் விமான நிறுவனங்களிடமிருந்து ஏப்ரல் மாத்தில் இருந்து 03 மாத காலத்திற்கு மாத கட்டணம் அறவிடாதிருக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. களஞ்சிய வசதி பெற்றுள்ள நிறுவனங்களிடமிருந்து 50 வீத கட்டணமே அறவிடப்படும். 03 மாதத்தின் பின்னரும் இந்த சலுகை வழங்கப்படுமா? என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படுமென அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.(பா)

Tue, 05/19/2020 - 06:05


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை