அனைத்து மீன்பிடி துறைமுகங்களிலும் 24 மணிநேர தகவல் பரிமாற்ற சேவை

அமைச்சர் டக்ளஸ் அதிகாரிகளுக்கு பணிப்பு

நாட்டில் தற்போது செயற்பட்டு வரும் 22 மீன்பிடித் துறைமுகங்களிலும் 24 மணி நேர தகவல் பரிமாற்றச் சேவையை இன்று முதல் அமுல்படுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடலில் தொழிலுக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் மீன்பிடித் துறைமுகங்களில் தகவல் பரிமாற்ற நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந் நிலையங்களுள் ஒரு சில நிலையங்களில் 24 மணிநேர சேவையை வழங்குகின்ற போதிலும், சில நிலையங்களில் நாளாந்தம் 24 மணிநேரமும் தொடர்ந்து சேவையாற்றக்கூடிய நிலையில் இருக்கவில்லை.

இந்த நிலையிலேயே அனைத்து தகவல் பரிமாற்ற நிலையங்களும் தினமும் 24 மணிநேரமும் சேவையை வழங்க வேண்டுமெனவும், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

இதேவேளை புத்தளம், தொடுவாவ பகுதியில் கடல் கொந்தளிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள கடலரிப்பை உடன் தடுப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று உடன் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Wed, 05/20/2020 - 11:39


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை