சவூதியில் முடக்க நிலை ஜூன் 21ஆம் திகதி முடிவு

சவூதி அரேபியாவில் தற்போது அமுலில் உள்ள முடக்கநிலை உத்தரவு ஜூன் 21ஆம் தேதி விலக்கி கொள்ளப்படவுள்ளது

ஆனால், புனித நகரான மக்காவில் மட்டும் பகல் 3 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரமழான் பண்டிகை என்பதால் அண்மையில் சவூதியில் நாள் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில், உள்நாட்டுக்குள் பயணம் செய்வது, பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவது, அரசு, தனியார் அலுவக பணிகளுக்கு செல்வது போன்றவற்றில் இருந்த தடை வரும் மே 31 முதல் விலக்கிக் கொள்ளப்படவுள்ளது.

சவூதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 74 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதோடு 399 பேர் உயிரிழந்துள்ளனர்.

Wed, 05/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை