கொவிட்-19: குழந்தைகளுக்கு அரிய அழற்சி நோய் பாதிப்பு

கொரோனா வைரஸால் குழந்தைகளுக்கு அரிய அழற்சி நோய் ஒன்று ஏற்படுவதாக கவலை எழுந்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளில் உள்ள பல குழந்தைகளுக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, நச்சு அதிர்ச்சி நோய்க்குரிய அறிகுறிகளை இது ஏற்படுவதாக தெரிகிறது.

இந்த நோயினால் குறைந்த எண்ணிக்கையான சிறுவர்கள் மோசமான நிலைக்கு முகம்கொடுப்பதாகவும் சில குழந்தைகள் அவசர சிகிச்சைக்கு முகம்கொடுக்க வேண்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரிட்டனில் இதனால் சுமார் 100 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐரோப்பாவின் ஏனைய பகுதிகளிலும் இதனை காண முடிவதாக கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடம் அதிகம் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவர்களிடம் கொரோனா தொற்று சம்பவங்கள் 1-2 வீதம் மாத்திரமே காணப்படுவதோடு மிகக் குறைவான சிறுவர்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Fri, 05/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை