கொவிட்-19 தொற்று சிறுவர்களிடையே மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்

கொவிட்-19 வைரஸ் தொற்று உலக அளவில் சிறுவர்களிடையே மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று மனித உரிமைக் குழுவான கிட்ஸ்ரைக்ட் தெரிவித்துள்ளது.

கொத்தடிமைகளாக்கப்படுவது, குறைந்த வயதில் கட்டாயத் திருமணத்துக்கு ஆளாக்கப்படுவது போன்ற அபாயங்களைப் பிள்ளைகள் சந்திக்க நேரலாம் என்று நெதர்லாந்தைச் சேர்ந்த உரிமைக் குழு கூறியது.

உலகளாவிய தொற்று நோயால் எற்பட்டுள்ள நெருக்கடி, இவ்வளவு காலம் எற்பட்ட முன்னேற்றத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாக கிட்ஸ்ரைக்ட் அமைப்பின் தலைவர் கூறினார்.

உலகமெங்கும் மில்லியன் கணக்கான சிறுவர்கள் வைரஸ் தொற்றுக் கட்டுப்பாடுகளால் பாடசாலைகளுக்கு செல்லாமல் உள்ளனர். பிள்ளைகள் அதிகமாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகாவிட்டாலும் அரசாங்கங்கள் எடுக்கும் முடிவுகள், பொருளாதார பின்விளைவுகளால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாய்க் கூறப்பட்டது.

மில்லியன் கணக்கான சிறுவர்கள் வறுமையில் தள்ளப்படுவதாகவும் கூறப்பட்டது. பாடசாலைகள் மூடப்படுவதால் பிள்ளைகள் வேலை செய்யத் தொடங்கலாம், முன்னதாக திருமணத்திற்குத் தள்ளப்படலாம், பதின்ம வயதில் கர்ப்பமடைய நேரலாம் என்று அமைப்பு எச்சரித்தது.

குடும்ப வன்முறை, சிறுமிகளைக் கூடுதலாகப் பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

தடுப்பூசிகள் போடுவது தள்ளிப்போடப்பட்டதால் குழந்தை இறப்பு வீதம் அதிகரித்துள்ளதாகவும், பாடசாலை உணவை மட்டுமே நம்பியுள்ள மாணவர்கள் போதுமான உணவு இன்றி தவிப்பதாகவும் அமைப்பு சுட்டிக்காட்டியது.

கிட்ஸ்ரைக்ட்ஸ் அமைப்பின் இவ்வாண்டு அறிக்கை கொவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கத்தைச் சேர்க்காவிட்டாலும் அடுத்து வரும் ஆண்டுகளில் அது குறித்து ஆராயப்படும் என்று கூறப்பட்டது. 

 

Wed, 05/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை