கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த மலேரிய மருந்தின் ஆய்வு நிறுத்தம்

கொவிட்-19 வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மலேரியா தடுப்பு மருந்தைப் பயன்படுத்தும் சோதனையை உலக சுகாதார அமைப்பு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது

பாதுகாப்பு அச்சத்தைத் தொடர்ந்து ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மருந்தின் சோதனைகளை நிறுத்துவதாகத் தெரிவித்தார் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோ அதனொம் கெப்ரியேசுஸ். மருந்து குறித்து சேகரிக்கப்பட்ட தகவல்களை பாதுகாப்புக் கண்காணிப்புக் கழகம் மறுஆய்வு செய்த பின்னரே சோதனைகள் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்பட்டது. கொவிட்-19 வைரஸ் தொற்று நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மருந்தைப் பயன்படுத்த வேண்டாம் என்று அந்த அமைப்பு கூறியது.

ஆய்வில் ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதில் உயிரிழப்புகள் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சில நோயாளிகளுக்கு பக்க விளைவுகளும் ஏற்படுத்துவதால், இந்த மருந்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது என்றும் அந்த அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

மலேரியா மருந்துகள் இதய நோயை உண்டுபண்ணும் எனும் சுகாதாரத்தரப்பினரின் எச்சரிக்கைகளையும் மீறி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ச்சியாக இதனைப் பரிந்துரைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹைட்ரொக்ஸி குளோரோகுயின் மருந்து, மலேரியாவுக்கு எதிராகச் செயற்படக்கூடியதென்பதுடன், ஆத்தரிட்டீஸ் போன்றவற்றுக்கும் வழங்கக்கூடியதென கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இதனை கொவிட் – 19 இற்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு ஆய்வு ரீதியாகப் பரிந்துரைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஹைட்ெராக்ஸி குளோரோகுயின் மருந்தை உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் 40,000 மருத்துவ பணியாளர்களுக்கு கொடுத்து பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டன.

Wed, 05/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை