கொவிட்-19 தொற்றின் மூலத்தை கண்டுபிடிக்க சீனா ஒத்துழைப்பு

கொவிட்-19 வைரஸ் தொற்றின் மூலத்தைக் கண்டுபிடிக்க மற்ற நாடுகளுடன் ஒத்துழைக்கத் தயாராகவுள்ளதாக சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசியல்வாதிகள் சீனாவை இழிவுபடுத்தும் வகையில் வதந்திகளைப் பரப்பியதாக அவர் கடுமையாகச் சாடினார்.

சீனாவின் ஆய்வகத்திலிருந்து வைரஸ் பரவியது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோவும் கூறிவருகின்றனர்.

நோய்த் தொற்று குறித்து சீனா வெளிப்படையாகச் செயல்படத் தவறியதாகவும் அவர்கள் குறைகூறியுள்ளனர்.

வூஹானில் உள்ள அரிய விலங்குச் சந்தையில் வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

சர்வதேச நாடுகளுடன் வைரஸ் தொற்றின் மூலத்தைக் கண்டுபிடிக்கத் தயாராக இருந்தாலும் விசாரணை நியாயமானதாகவும் ஆக்ககரமானதாகவும் இருக்க வேண்டும் என்று கூறினார் வாங்.

உலக சுகாதார அமைப்பும் வைரஸ் தொற்று குறித்த விசாரணையில் மற்ற நாடுகள் கலந்துகொள்ள அனுமதிக்குமாறு சீனாவை கோரியது.

ஐக்கிய நாட்டு நிறுவனம் வைரஸ் தொற்றை உலக நாடுகள் கையாளும் முறை குறித்து சந்திப்பு நடத்தவுள்ள வேளையில், சீனா கொள்ளை நோய் முடிவுக்கு வந்த பின்னரே அத்தகைய சந்திப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றது.

 

Tue, 05/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை