கொவிட்-19: சீனா மீது தடை விதிக்க டிரம்புக்கு அதிகாரம்: செனட் பரிந்துரை

கொவிட்-19 வைரஸ் தொற்று தொடர்பான முழு விபரத்தை அளிக்க தவறும் பட்சத்தில் சீனா மீது பொருளாதாரத் தடை விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு அதிகாரம் வழங்கும் தீர்மானம் ஒன்று அந்நாட்டு செனட் சபையில் கொண்டுவரப்பட்டுள்ளது.

டிரம்புக்கு நெருக்கமான ஆளும் குடியரசுக் கட்சியின் முன்னணி செனட்டரான லெண்ட்சி கிரஹம் இந்த தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ளார்.

வைரஸ் பரவல் தொடர்பில் என்ன நடந்தது என்பது பற்றிய அனைத்துலக விசாரணையில் சீனாவை ஒத்துழைக்கச் செய்வது இதன் நோக்கமாகும். இதில் சீனாவுக்கு எதிராகக் கடுமையான தடைகளை விதிப்பதற்கு, ஜனாதிபதி டானால்ட் டிரம்புக்குச் சட்டபூர்வ அனுமதி வழங்க வேண்டும் என்று கிரஹாம் பரிந்துரை செய்துள்ளார்.

கொவிட்-19 உலகளாவிய நோய்ப் பரவலைச் சீனா முறையாகக் கையாளவில்லை என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய இந்த வைரஸ் தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்வதாக சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

 

Thu, 05/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை