கொவிட்-19: 7 அல்லது 8 சாத்தியமான தடுப்பு மருந்துகள் பற்றி அவதானம்

கொரோனா வைரஸுக்கு எதிரான சுமார் ஏழு அல்லது எட்டு சாத்தியமான தடுப்பு மருந்துகள் முன்னணியில் இருப்பதாகவும் அவற்றின் பணிகள் துரிதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் முன் கடந்த திங்கட்கிழமை வீடியோ மூலம் விளக்கம் அளிக்கும்போதே உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கெப்ரியேசுஸ் இதனைத் தெரிவித்தார். கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சிக்கு 40 நாடுகளின் தலைவர்கள், அமைப்புகள் மற்றும் வங்கிகள் ஒரு வாரத்திற்கு முன் 8 பில்லியன் டொலர் நிதி அளிக்க உறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இதற்கு மேலும் நிதி தேவைப்படுவதாக கெப்ரியேசுஸ் தெரிவித்துள்ளார்.

“எம்மிடம் சாத்தியமான தடுப்பு மருந்துகள் தற்போது உள்ளன. இவைகளில் சுமார் ஏழு, எட்டு முன்னணியில் உள்ளன. ஆனால் எம்மிடம் நூற்றுக்கும் அதிகமான சாத்தியமாக தடுப்பு மருந்துகள் உள்ளன.

அவைகளில் சிலது பற்றியே அவதானம் செலுத்தியுள்ளோம். அவை சிறந்த பெறுபேறு தரும் என்று நாம் எதிர்பார்ப்பதோடு அந்த சாத்தியமான தடுப்பு மருந்துகளின் பணிகளை சிறந்த திறனுடன் துரிதப்படுத்தியுள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டார்.  எனினும் அந்த மருந்துகள் பற்றிய விபரங்களை அவர் குறிப்பிடவில்லை. கடந்த ஜனவரி தொடக்கம் “உலக சுகாதார அமைப்பு விலங்கு மாதிரி வடிவம் தொடக்கம் மருத்துவ சோதனை வடிவம் வரை இடையில் உள்ள அனைத்து தடுப்பு மருந்து வளர்ச்சியை விரிபடுத்தவும் கண்காணிக்கவும் உலகெங்கும் ஆயிரக்கணக்கான சோதனைகளை மேற்கொண்டு வருகிறது” என்றும் கெப்ரியேசுஸ் தெரிவித்தார்.

Wed, 05/13/2020 - 16:09


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை