கொவிட்-19 ஐ கட்டுப்படுத்த அமெரிக்கா 5.8 மில். டொலர் இலங்கைக்கு நன்கொடை

கொவிட்-19 ஐ கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அமெரிக்கா 5.8 மில்லியன் டொலரை இலங்கைக்கு நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது.

ஆரம்பத்தில் இலங்கைக்கு 4.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கா நன்கொடையாக வழங்குவதென தீர்மானித்திருந்த போதும் பின்னர் இலங்கைக்கான அதன் பங்களிப்பை 5.8 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது.

அமெரிக்கா கடந்த 20 வருடங்களில் இலங்கைக்கு ஒரு பில்லியனிலும் அதிக தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளதென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்லிட்ஸ் தெரிவித்தார்.

இந்நிதி சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (US AID)ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் சமூக சேவைகளை கட்டியெழுப்புவதற்காக 02 மில்லியன் டொலரும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளை வலுப்புடுத்துவதற்காக மேலும் 02 மில்லியன் டொலரும் பெண்களின் பொருளாதார பங்கேற்பை அதிகரிப்பதற்காக 5,90,000 அமெரிக்க டொலர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவத் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உலக நாடுகளுக்காக 775 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளது.

பல மாதங்களாக கொவிட்-19க்கு எதிரான போராட்டங்கள் உலக நாடுகளில் முன்னெடுக்கப் பட்டு வரும் நிலையில் அமெரிக்கா தனியொரு நாடாக அனைத்து நாடுகளுக்கும் பாரிய நிதியுதவியை வழங்கி வருகின்றது.

Fri, 05/08/2020 - 09:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை