கொரோனாவிலிருந்து 16 கடற்படை வீரர்கள் குணமடைவு

கொவிட் -19 தொற்றுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் இரு கடற்படை வீரர்களுக்கு நேற்றையதினம் (07) மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் மூலம் குறித்த வைரஸ் அவர்களின் உடம்பில் இல்லை என்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இக்கடற்படை வீரர்கள் இருவரும், வெலிசறை கடற்படை முகாமில் பணியாற்றி வந்தவர்கள் என்பதோடு, அவர்கள் கொவிட் -19 தொற்றுக்கு உள்ளானதை தொடர்ந்து சிகிச்சைக்காக  IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். குறித்த வைத்தியசாலையில் அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் முடிவுகளுக்கு அமைய குறித்த வைரஸ் அவர்களின் உடம்பில் இல்லை என்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர்கள் நேற்றையதினம் வைத்தியசாலையிலிருந்து வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இவ்விரு கடற்படை வீரர்கள் உட்பட, கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கடற்படை வீரர்கள் 16 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், அவர்கள் சுகாதார ஆலோசனைக்கு அமைய மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Fri, 05/08/2020 - 18:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை