ஆப்கான் மருத்துவமனை தாக்குதல்: இரு குழந்தைகள் உட்பட 16 பேர் பலி

ஆப்கான் தலைநகர் காபுலில் சர்வதேச மனிதாபிமான நிறுவனம் ஒன்றினால் நடத்தப்படும் மகப்பேற்று மருத்துவமனை ஒன்றின் மீது பொலிஸ் வேடமிட்டு துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் புதிதாகப் பிறந்த இரு சிசுக்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நாட்டின் கிழக்கில் உள்ள நன்கார் மாகாணத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற பொலிஸ் கொமாண்டர் ஒருவரின் இறுதிக் கிரியை மீது கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பிறிதொரு தற்கொலை தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டு மேலும் 68 பேர் காயமடைந்துள்ளனர்.

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவின் ஆப்கான் கிளை அமைப்பான இஸ்லாமிய அரசு கோராசன், நன்கார் குண்டுத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. எனினும் காபுல் தாக்குதலுக்கு உடன் எந்தத் தரப்பும் பொறுப்பேற்கவில்லை. அமெரிக்க படைகள் வாபஸ் பெறும் உடன்படிக்கை எட்டப்பட்ட பின் நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தியதாக குறிப்பிட்டிருக்கும் ஆப்கானின் பிரதான கிளர்ச்சிக் குழுவான தலிபான்கள் இந்த இரண்டு தாக்குதல்களிலும் தொடர்பு இல்லை என்ற மறுத்துள்ளனர்.

Thu, 05/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை