12.5 தொன் மருந்துகளுடன் வந்த புதிய இந்திய உயர்ஸ்தானிகர்

12.5 தொன் மருந்துகளுடன் வந்த புதிய இந்திய உயர்ஸ்தானிகர்-New Indian High Commissioner to Sri Lanka Arrived with Medical Supplies

இலங்கையின் புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமனம்பெற்றுள்ள கோபால் பாக்லே நேற்று (08) இலங்கை வந்தடைந்தார்.

அத்துடன் அவர் வந்த விமானத்திலேயே இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான 12.5 தொன் நிறையுடைய மருந்துப் பொருட்களையும் நன்கொடையாக எடுத்து வந்துள்ளார்.

12.5 தொன் மருந்துகளுடன் வந்த புதிய இந்திய உயர்ஸ்தானிகர்-New Indian High Commissioner to Sri Lanka Arrived with Medical Supplies

இந்திய அரசாங்கம் ஏற்கனவே இதுபோன்ற 3 தொகுதி மருந்துப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ள நிலையிலேயே நான்காவது தொகுதி மருந்துப் பொதி புதிய உயர்ஸ்தானிகரூடாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை வந்தடைந்த புதிய உயர்ஸ்தானிகர் இந்தியர்கள் சார்பில் இலங்கை மக்களுக்கு தனது வெசாக் தின வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டார்.

12.5 தொன் மருந்துகளுடன் வந்த புதிய இந்திய உயர்ஸ்தானிகர்-New Indian High Commissioner to Sri Lanka Arrived with Medical Supplies

கடந்த மார்ச் 15 ஆம் திகதி சார்க் தலைவர்களுக்கிடையே நடைபெற்ற இணைய மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச தொற்று நோயான கொவிட்-19க்கு எதிராக இணைந்து போராடுவோம் என்று அறிவித்திருந்தார். இதற்கமைய நான்காவது தடவையாக மேலும் ஒரு தொகுதி மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

(லக்ஷ்மி பரசுராமன்)

Sat, 05/09/2020 - 16:19

from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை