1.2 டிரில்லியன் ரூபா இடைக்கால கணக்கீட்டு அறிக்கைக்கு ஒப்புதலா?

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தின் அனுமதியின்றி 1.2 டிரில்லியன் ரூபாய் இடைக்கால கணக்கீட்டு அறிக்கைக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாக ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது.

ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று (07) நடைபெற்ற ஊகடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அரச நிதி தொடர்பான அறிக்கையில் இந்த உண்மைகள் வெளிவந்துள்ளன. 1.2 டிரில்லியன் ரூபாய் இடைக்கால கணக்கீட்டு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் பாராளுமன்றத்தின் அனுமதியின்றி நிதி எவ்வாறு ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு எந்தவொரு நபருக்கும் வாக்கெடுப்பை நடத்தாமல் கணக்கீட்டு அறிக்கையை செயற்படுத்தும் அதிகாரம் இல்லை. பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்படுவது அவசியமாகும்.

ஜனாதிபதி அல்லது வேறு எந்த நபருக்கோ தன்னிச்சையாக அரச நிதிகளை செலவழிக்க அதிகாரம் வழங்கவில்லையென அரசியலமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

Fri, 05/08/2020 - 09:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை