'ஈஸி காஷ்' ஊடாக ஹெரோயின் விற்பனை; சொகுசு காருடன் 08 பேர் கைது

‘ஈஸி காஷ்’ (Easy Cash) ஊடாக சொகுசு காரைப் பயன்படுத்தி ஹெரோயின் விற்பனையிலீடுபட்டுவந்த 08 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான 48 கிராம் ஹெரோயினுடன் இந்த எட்டு ஹெரோயின் விற்பனையாளர்களும் தொம்பே பொலிஸாரினால் நேற்று (16) முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் விற்பனைக்காக உபயோகிக்கப்பட்ட சொகுசுக் காருக்குள்ளிருந்து ஹெரோயின் விற்பனை மூலம் பெறப்பட்ட 19,800/= ரூபா ரொக்கப்பணமும் கையடக்கத் தொலைபேசியொன்றையும் பொலி ஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சொகுசுக் கார் வெல்லம்பிட்டி பிரதேசத்திலிருந்து தொம்பே பிரதேசத்தை நோக்கி மல்வான தொம்பே வீதியினூடாக சென்று கொண்டிருக்கும்போது பவுரு ஓய பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் விற்பனையாளர் (37) ஒருவருடன் கைது செய்யப்பட்டது.

சொகுசுக் காரிலிருந்து கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபராகக் கருதப்படும் ஹெரோயின் விற்பனையாளர் பல்வேறுபட்ட கொள்ளைச் சம்பவத்துக்காக ஐந்து வருடம் சிறைத் தண்டனையை அனுபவித்து எட்டு மாதங்களுக்கு முன்னர் சிறையிலிருந்து விடுதலை பெற்று வந்துள்ளதோடு இச் சந்தேக நபர் வெல்லம்பிட்டி சிங்ஹபுர பிரதேசத்தைச் சேர்ந்தவராவர்.

ஏனைய ஏழு ஹெரோயின் விற்பனையாளர்களும் தொம்பே பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு இவர்களிடமிருந்து 21 கிராமும் 600 மில்லிகிராமுமான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ் ஏழு நபர்களும் "ஈஸி கேஷ்" பணக் கொடுக்கல் வாங்கல் மூலம் ஹெரோயின் விநியோகத்தில் ஈடுபட்டுவந்துள்ளதோடு இவர்கள் கிரிந்திவெல, தொம்பே, வலிவேரிய மற்றும் வெல்லம்பிடிய பிரதேசங்களைச்  சேர்ந்த 19 வயதுக்கும் 40 வயதுக்குமிடைப்பட்டவர்களாவர்.

தொம்பே பொலிஸாரால் தொம்பே பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 48 கிராம் ஹெரோயினில் 26 கிராமும் 400 மில்லி கிராம் ஹெரோயினோடு ரொக்கப்பணம் மற்றும் கையடக்கத்தொலைபேசியும் சொகுசுக் காரிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.

மல்வானை விசேட நிருபர்

Mon, 05/18/2020 - 08:59


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை