PHI பணி பகிஷ்கரிப்பு; இக்கட்டான நிலையில் வேதனை

PHI பணி பகிஷ்கரிப்பு; இக்கட்டான நிலையில் வேதனை-Apr 04-PHI Strike-Pavithra Wanniarachchi

கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஏமாற்றம்

பொதுச் சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுத்துள்ள நிலையிலும் அவர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு எடுத்துள்ள தீர்மானமானது வேதனையளிக்கிறது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

பொதுச் சுகாதார பரிசோதர்கள் சங்கத்தின் கௌவரத்தை இல்லாமல் செய்யும் செயல் இதுவாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவலை இல்லாதொழிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தற்போது சேவையில் ஈடுபட்டு வரும் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதார சேவையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கடந்த மார்ச் 29 ஆம் திகதி சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார சேவையிலுள்ள 20 தொழிற்சங்கங்களின் பங்குபற்றுதலுடன் விசேட கலந்துரையாடலொன்று அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது, சுகாதார அமைச்சினால் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அனைத்து விடயங்களிலும் எவ்வித நிபந்தனையுமற்ற ஒத்துழைப்பை வழங்குவதாக தொழிற்சங்கங்களின் தலைவர் அமைச்சரிடம் தெரிவித்திருந்தனர்.

ஆயினும் கடந்த புதன்கிழமை (01) குறைந்தபட்ச பாதுகாப்பு வசதி வழங்கப்படாமை, போக்குவரத்து, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வழங்கப்படாமை, அத்தியாவசிய சட்ட விதிகளை உருவாக்காது அதிகாரிகளை அபாயத்திற்குள்ளாக்குதல் ஆகிய நான்கு விடயங்களை முன்னிறுத்தி நாளையதினம் (04) தாங்கள் சேவையிலிருந்து விலகப் போவதாக அறிவித்திருந்தனர்.

கடந்த ஜூன் 29ஆம் திகதி இடம்பெற்ற தொழிற்சங்க கூட்டத்தில், பொது சுகாதார பரிசோதகர்கள், அவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அறிவித்திருந்தனர். முகக் கவசங்கள், கை கிருமி நீக்கும் திரவம், உணவு மற்றும் அடிப்படை போக்குவரத்து வசதி ஆகியவற்றை வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்த வசதிகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சின் செயலாளர் பத்ரானி ஜயவர்தன மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியசர் அனில் ஜாசிங்க ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கான நடவடிக்கையை உரிய முறையில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாறு நடந்து கொள்வது துரதிர்ஷ்டவசமானது என, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் பொது சுகாதார பரிசோதர்கள் சங்கத்தை நேற்று (02) கொழும்பில் அழைத்து, சுகாதார அமைச்சில் இரவு 8.00 மணிக்கு விசேட கலந்துரையாடலை மேற்கொண்டு. அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக வழங்கப்பட்டது. இதன்போது, சுகாதார தமக்கு தனிப்பட்ட ரீதியில் கிடைத்த கை கழுவும் கிருமி நீக்கிகள் 4,000 போத்தல்களை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இவ்வாறு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், அவர்கள் எடுத்துள்ள தீர்மானம் கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார்.

இது அவர்களது தொழில்முறை மதிப்பை இழக்கச் செய்யும் காரணியாகும் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Fri, 04/03/2020 - 18:57


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை