O/L பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும்

O/L பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியிடப்படும்-GCE OL Results Will be Released Today Evening

2019 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று (27) மாலைக்குள் வெளியிடப்படவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பெறுபேறுகளை வெளியிடுவது தொடர்பான நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, பரீட்சைப் பெறுபேறுகள் உடனடியாக பாடசாலைகளுக்கு தபாலில் அனுப்பப்படமாட்டாது என அவர் தெரிவித்திருந்தார்.

எனவே, பெறுபேறுகளை  பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk இல் பார்வையிடலாம் எனவும் பாடசாலை அதிபர்களுக்கு ஒன்லைன் முறை மூலம் பெறுபேறுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கையடக்க தொலைபேசிகளில் பெறுபேறுகளை பெற...
Exams ஒரு இடைவெளி சுட்டிலக்கம் டைப் செய்து உரிய வலையமைப்பின் அடிப்படையில் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்ப வேண்டும்.

Airtel - 7545
Dialog - 7777
Etisalat - 3926
Mobitel - 8884
Hutch - 8888

Mon, 04/27/2020 - 14:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை