கொரோனா ஒழிப்புக்கு மருத்துவப் பொருட்களை தொடர்ந்து வழங்கும் HDF

மனித அபிவிருத்தி  தாபனம் (HDF) மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ்  ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.

அதில் ஒரு பகுதியாக மனித அபிவிருத்தி தாபன தலைவர் பி.பி.சிவப்பிரகாசம்  தலைமையில் கண்டி மாவட்ட செயலகத்தின் செயலாளர், கண்டி பிரதேச செயலகத்தின் செயலாளர், கலஹா சுகாதார வைத்திய அதிகாரி,  தெல்தோட்ட பிரதேச செயலகத்தின் செயலாளர், கண்டி பொலிஸ் தலைமையகத்தின் உபபொலிஸ்மா அதிபர் மற்றும் கலஹா பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி ஆகியோருக்கு ஒரு தொகை மருத்துவ உதவி  பொருட்கள் வழங்கப்பட்டன.

(பூண்டுலோபா நிருபர்)

Wed, 04/08/2020 - 07:53


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை