கேரள கஞ்சா கடத்திய மூவருக்கு வி.மறியல்

மன்னார் குதிரை மலை கடற்பகுதியூடாக   கேரளா கஞ்சா பொதிகளை கடத்தி வந்த   சந்தேநபர்கள் மூன்று பேரையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க, மன்னார் நீதவான் எம். கணேசராஜா நேற்று (17) உத்தரவிட்டுள்ளார்.

மன்னார் குதிரை மலைக் கடற்பரப்பினூடாக கண்ணாடி இழை படகு மூலம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நேற்று முன்தினம் (16)  கேரளா கஞ்சா கொண்டு வரப்படுவதாக சிலாவத்துறை கடற்படை மற்றும் விசேட அதிரடிப்படை , போதைவஸ்து தடுப்புப் பிரிவினர் ஆகியோருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.

இதன்போது விரைந்து செயற்பட்ட சிலாவத்துறை கடற்படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர், 122 கிலோ 460 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றியதோடு, கடத்தலில் ஈடுபட்ட கற்பிட்டி பகுதியைச்  சேர்ந்த  03 சந்தேகநபர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 03 சந்தேக நபர்கள், கண்ணாடி இழை படகு மற்றும் மீட்கப்பட்ட கேரளா கஞ்சா என்பவை  சிலாபத்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் குறூப் நிருபர்)

Sat, 04/18/2020 - 11:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை