ஊரடங்கை மீறியவர்களுக்கு தண்டனை வழங்கிய பொலிஸார் பணி இடைநிறுத்தம்

ஊரடங்கை மீறியவர்களுக்கு தண்டனை வழங்கிய பொலிஸார் பணி இடைநிறுத்தம்-2 Police Officer Interdicted-Maradana Darley Road Incident

ஊரடங்குச் சட்டத்தை மீறி பயணித்த நால்வருக்கு தண்டனை வழங்கியமை தொடர்பில் பொலிஸார் இருவர் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

நேற்றையதினம் (12) மருதானை, டார்லி வீதிப் பகுதியில், ஊரடங்குச் சட்டத்தை மீறி வீதியில் சென்ற நான்கு பேரை தடுத்து நிறுத்திய பொலிஸார் இருவர், கைகளை மாற்றி காதுகளில் பிடித்தவாறு, அமர்ந்து எழும்புமாறு தெரிவித்துள்ளனர்.

ஊடகங்களில் வெளியான இது தொடர்பான செய்தி தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, கொழும்பு மாநகர போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும், அவசர அழைப்பு / நகர போக்குவரத்து உதவிப் பொலிஸ் அத்தியட்சகரினால் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

கீழ்ப்படியாமை மற்றும் அவமானகரமாக நடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இவ்வதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Mon, 04/13/2020 - 15:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை