நிவாரணப் பணியில் அரசியல் நோக்கம் இல்லை

நிவாரணப்பணிகளில் அரச உத்தியோகஸ்த்தர்கள் அனைவரும்  ஒன்றிணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே  அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

கடந்த மார்ச் மாதம் 11ஆம் திகதி இலங்கையில் கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டத்தன் பின்னர் சில மாவட்டங்கள் தொடர்ச்சியாக முடக்கப்பட்டுள்ளதுடன், சில மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு அமுல்படுத்தப்பட்டு பொது மக்களின் பாதுகாப்பு உறுதிபடுள்ளது.

ஊரடங்கு வேலையில் அரச உத்தியோகஸ்த்தர்கள் வீடுகளிலிருந்து வேலை செய்யவும் ஏனைய தொழிலை இழந்தோருக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. இலங்கை வரலாற்றில் இதுவரையில்  எந்தவொரு அரசாங்கமும் இவ்வாறு செய்திருக்கவில்லை.

நாட்டில் 57 இலட்சம் குடும்பங்கள் இருப்பதாக இலங்கை குடிசன மதிப்பீட்டு திணைக்களம் அறிக்கை தெரிவிக்கின்றது.  இதில் 52 இலட்சம் குடும்பத்திற்கு அரசாங்கத்தினால்   நிவாரணம்  வழங்க   அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சமுர்த்தி பயனாளிகள் 25 இலட்சத்து 73 ஆயிரத்து 664 பேருக்கு கடந்த ஏப்ரல் 14ஆம் திகதிக்கு முன்னர் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. முதியோர் கொடுப்பனவு பெறுவோர் 05 லட்சத்து 74 ஆயிரத்து 387 பேருக்கும் ஏனைய விதத்தில் அடையாளம் காணப்பட்ட 19 இலட்சம் பேருக்கும் மேலதிகமாக நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 52 இலட்சத்து 64 ஆயிரத்து 861 பேர்  நிவாரணம் பெறுவதற்கு  தகுதியானவர்களாகும்.

அத்துடன், அரச உத்தியோகஸ்த்தர்கள் 13 இலட்சத்து 81 ஆயிரத்து 224 பேர் உள்ளங்குவதுடன் அரச ஓய்வூதியம் பெறுவோர் 6 இலட்சத்து 65 ஆயிரம் பேர் அடங்களாக மொத்தமாக 72 இலட்சத்து 91 ஆயிரத்து  64 பேர் நிவாரணம் பெறுகின்றனர்.

அரசியல் இலாப நோக்கோடு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு மாத்திரமே நிவாரணம் வழங்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார ஊடகத்திற்கு தெரிவித்துள்ளதை மறுக்கிறேன்.  உதாரணமாக கண்டி மாவட்டத்தில் தெல்தொட்ட பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் மொத்த குடும்ப எண்ணிக்கை 19,226 ஆகும்.

இதில் சமுர்த்தி பயனாளிகள், முதியோர் கொடுப்பனவு பெறுவோர் தவிர்ந்து 19.5 சதவீதமானோர் நிவாரணம் பெற்றுக்கொள்ள தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு இருக்கையில் எவ்வாறு அரசியல் நோக்கோடு நிவாரணம் வழங்குவதாக கூறமுடியும் என்றார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

Sat, 04/18/2020 - 10:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை