கொரோனா என சந்தேகிக்கப்பட்டவர் வீடு திரும்பினார்

கொரோனா என சந்தேகிக்கப்பட்டவர் வீடு திரும்பினார்-COVID19 Suspicious-Patient Returned Without Any Disease

சுய தனிமைப்படுத்தலில் இருந்தவர் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக இரண்டு தினங்களுக்கு முன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றுக்கான எந்தவித அறிகுறியும் இல்லை என இரத்த பரிசோதனையில் அறியமுடிந்ததையடுத்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  உள்ள நபரே இவ்வாறு இன்று (14) வீடு திரும்பியுள்ளார்.

இவர் கொழும்பில் தனியார் தொழிற்சாலை ஒன்றில்  கடமையாற்றி வந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொரோணா தொற்று காரணமாக வாழைச்சேனை பிரதேசத்துக்கு திரும்பிய நிலையில் சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைய சுய தனிமைப்ப்படுத்தலில் இருந்தார்.

தனிமைப்படுத்தலில் இருந்து வந்த சில நாட்களில் காய்ச்சல் மற்றும் தொண்டை வலி ஏற்பட்ட நிலையில் பாதுகாப்பு கருதி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுக்கான எந்தவித அறிகுறியும் இல்லை என இரத்த பரிசோதனையில் அறிய முடிந்ததையடுத்து வைத்தியசாலையில் இருந்து இன்று (14) வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இவர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதை அடுத்து, வாழைச்சேனை பிரதேசத்தில் பெரும்பாலான மக்கள் பீதியடைந்த நிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை சுயதனிமைப்படத்தலில் உள்ளவருக்கு கொரேனா தொற்று உள்ளது என்றும் குறித்த நபர் மீது பொய்யான தகவல்களை முகப்புத்தகத்தில் அல்லது வட்ஸ்சப் குறூப்புகளிலோ வெளியிடுபவர்கள் தொடர்பாக கண்டு பிடிக்கப்பட்டால் சுகாதா வைத்தியஅதிகாரிகள் அலுவலகத்தினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரி தெரிவித்தார்.

(கல்குடா தினகரன் நிருபர் - எஸ்.எம்.எம். முர்ஷித்)

Tue, 04/14/2020 - 21:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை