வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்துவர ஏற்பாடு

ஏப்ரல் 21 முதல் குழு நாடு திரும்பும்

உலகளாவிய ரீதியில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைத்  தொடர்ந்து, வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

முதற்கட்ட நடவடிக்கையாக, சார்க் நாடுகளிலுள்ள இலங்கை மாணவர்களை அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, விமான நிலைய பணிப்பாளர் செஹான் சுமணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த நாடுகளின் தூதுவராலயங்களின் ஊடாக மாணவர்கள் தொடர்பான தகவல் சேகரிக்கப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் முதல் நடவடிக்கையாக பாகிஸ்தானிலுள்ள 113 மாணவர்கள் நாளை மறுதினம் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக, இந்தியாவில் கல்வி கற்கும் 102 மாணவர்களை அடுத்த வாரமளவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

Sun, 04/19/2020 - 17:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை