இலங்கைக்கு ஒரு தொகுதி மருத்துவ கையுறைகளை வழங்கிய இந்தியா

கொவிட் – 19 நோயினை எதிர்கொள்வதற்காக இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் உதவிகளின் தொடர்ச்சியாக ஒரு தொகுதி மருத்துவ கையுறைகள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் இலங்கை அரசாங்கத்திடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2020 ஏப்ரல் 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் 13 தொன்கள் உயிர்காக்கும் அத்தியாவசிய பொருட்கள் இந்தியாவால் இலங்கைக்கு கையளிக்கப்பட்டன.

2020 மார்ச் 15ஆம் திகதியன்று இடம்பெற்ற சார்க் தலைவர்களின் வீடியோ மாநாட்டின் போது, அயல் நாடுகளின் அவசர உதவி பணியாளர்களுக்குகொவிட் - 19ஐ கையாள்வதற்கான முயற்சிகளுக்கு உதவுவதற்காக இந்தியா இணைய மூலமான பயிற்சிகளை வழங்கும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், இந்திய வெளியுறவு அமைச்சு, கொவிட் - 19 முகாமைத்துவ உத்திகள் மற்றும் தொடர்புடைய அம்சங்கள் குறித்து சுகாதார நிபுணர்களுக்காக e-ITEC குறுகிய பயிற்சிகளை இணையம் மூலமாக நடத்துகிறது.

Tue, 04/28/2020 - 07:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை