க.பொ.த. (சா.த) பெறுபேறுகளின்படி கிழக்கில் கல்முனை கல்வி வலயம் முதலாம் இடத்தில்

2019 கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் கல்முனை கல்வி வலயம் முதலாம் இடத்தில்  உள்ளது.

கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட 65 பாடசாலைகளில் 79.33 வீதமான மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். கல்முனை கல்வி வலயம் தேசிய ரீதியில் 12வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று இரண்டாம் நிலையிலும், தெஹியத்தகண்டி, அம்பாறை, மட்டக்களப்பு மத்தி ஆகிய கல்வி வலயங்கள் மூன்றாம், நான்காம், ஐந்தாம் நிலைகளில் உள்ளது.

இதுவரை காலமும் கல்வி துறையில் பரீட்சை பெறுபேறுகளின் மாகாண அடிப்படையில் 9 வது நிலையில் இருந்து வந்த கிழக்கு மாகாணம் 2019 சாதாரண பரீட்சை முடிவின் பிரகாரம் 07 ஆம் இடத்தை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது கிழக்கு மாகாணம்  இந்நிலையை அடைவதற்கு கல்முனை வலயத்தின் பங்களிப்பு அதிகமானது என்றும் அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய ஓய்வு பெற்ற கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பாராட்டப்பட வேண்டியவர் என கல்முனை வலய அதிபர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

மருதமுனை தினகரன், நற்பிட்டிமுனை விசேட நிருபர்கள் 

Wed, 04/29/2020 - 13:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை