போட்டிகள் இன்மையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி

போட்டிகள் இன்மையால் பாதிக்கப்பட்டோருக்கு உதவி-Relief to the cricketing community in Sri Lanka-SLC

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை

கொவிட்-19 தொற்றுநோய் மோசமடைந்து வரும் நிலையில், இதனால் பாதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் துறையிலுள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு நிவாரணம் வழங்க, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (SLC) நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, 3 பிரவுகளின் கீழ் இந்நிதியுதவிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

மைதானங்கள் மற்றும் அவற்றின் உட்கட்டமைப்பை பேணுதல், நிதி சிக்கல்களை எதிர்கொண்டுள்ள மாவட்ட மட்ட வீரர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குதல், நிதி சிக்கல்களுக்கு முகம் கொடுத்துள்ள கிரிக்கெட் நடுவர்களுக்கு நிதி உதவி வழங்குதல் ஆகிய மூன்று முக்கிய பிரிவுகளால் இந்நிவாரணத் திட்டம் வழங்கப்படவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவன செயற்குழுவின் முடிவிற்கு அமைய, மைதானம் மற்றும் அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக மைதானமொன்றுக்கு ரூபா 100,000 வீதம் 11 வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக நிதி நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள, மாவட்ட மட்ட கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் முகாமையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கும் வகையில், 25 மாவட்டங்களுக்கும் தலா ரூ. 150,000 வழங்கப்படவுள்ளது.

அத்துடன், இலங்கை கிரிக்கெட் நடுவர்கள் சங்கத்திற்கு, ரூ. 780,000 நிதியை வழங்கவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் முன்வந்துள்ளது.

Tue, 04/28/2020 - 12:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை