ரமழான் தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று

ரமழான் தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று-New Moon-Crescent-for the Ramazan

கொழும்பு பெரிய பள்ளிவாசலில் மாநாடு

ஹிஜ்ரி 1441 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று 23ஆம் திகதி வியாழக் கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன பிரதி மாதமும் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடி தலைப்பிறையை ஏகமனதாகத் தீர்மானித்து அறிவித்து வருகின்றன.

அவ்வாறே இன்று (23) புனித ரமழான் மாதத் தலைப்பிறை பற்றி ஏகமனதாகப் பெறப்படும் தீர்மானம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையினூடாக அறிவிக்கப்படும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை அறிவித்துள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழுத் தலைவர் கலீபதுல் குலபா மௌலவி ஜே அப்துல் ஹமீத் பஹ்ஜி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மேற்கொள்ளப்படும் ஏகமனதான தீர்மானம் அறிவிக்கப்படும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, முஸ்லிம் சமய சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், ஸ்ரீலங்கா ஷரீஆ கவுன்ஸில், மேமன் சங்கம் மற்றும் வானிலை அவதான நிலையம் ஆகிய வற்றின் முக்கிய பிரதிநிதிகள் மாத்திரம் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாட்டில் தற்பொழுது கொவிட் 19 வைரஸ் அச்சுறுத்தல் காணப்படுவதால் அதனால் ஏற்படும் பாதிப்பை கருத்திற் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட முக்கிய பிரதிநிதிகள் மாத்திரம் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் இன்றைய இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்தது

ஸாதிக் ஷிஹான்

Thu, 04/23/2020 - 15:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை