மாணவர்களை அழைத்துவர கொல்கத்தாவுக்கு விசேட விமானம்

இந்தியாவின் கொல்கத்தாவில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக, இன்று (30) காலை ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான விசேட விமானமொன்று, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 1187 எனும் விமானம், இன்று முற்பகல் 10.15 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் கொல்கத்தா நோக்கி புறப்பட்டுள்ளது.

இவ்விமானத்தில் இலங்கைக்கு வருகை தரவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை தொடர்பில்  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்படவில்லையென, விமான நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார். 

சார்க் நாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான முதற்கட்டம் நேற்றையதினத்துடன் நிறைவடைந்த நிலையில், இந்தியாவின் கொல்கத்தாவில் சிக்கியுள்ள குறித்த மாணவர்களை இன்றையதினம் இலங்கைக்கு அழைத்து வந்த பின்னர், முதற் கட்டம் நிறைவடைவதாக தெரிவித்தார்

ஏனைய நாடுகளில் பல நாட்களாக சிக்கியுள்ள மாணவர்களை இந்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான இரண்டாம் கட்டம்  ஆரம்பிக்கப்படவுள்ளதாக, ஶ்ரீலங்கன் விமான சேவையின் ஊடக முகாமையாளர் தீபால் பெரேரா தெரிவித்தார்

தற்போது கொல்கத்தா சென்றுள்ள இவ்விமானத்தில் விமானி உட்பட விமான சேவை பணியாளர்கள் 07 பேர் பயணித்துள்ளனர்.

குறித்த விமானம் அங்கிருந்து பிற்பகல் 5.15  மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Thu, 04/30/2020 - 12:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை